மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி 18 வது வார்டு மேட்டு நீரேத்தான் தென்னிலை நாட்டு கள்ளர் சங்கம் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை தலைமை தாங்கினார். எம்.கே. கணேசன், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் ரகுபதி வரவேற்றார். கள்ளர் பண்பாட்டு
மைய ஒருங்கிணை ப்பாளர் வழக்கறிஞர் கலைமணி நிர்வாகிகளுக்கு காஞ்சி வனம் சாமி திருஉருவ நாள்காட்டி வழங்கினார்.பேரூராட்சி கவுன்சிலர் அசோக்குமார் வாழ்த்தி பேசினார். சங்கத் தலைவர் உதயசூரியன் நினைவு பரிசு வழங்கினார். இதில், கள்ளர்
சங்கம் மற்றும் பண்பாட்டு மைய நிர்வாகிகள் தனசேகரன், பாலகிருஷ்ணன், மருதப்பன்
உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில், சங்க பொருளாளர் பாலு
நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி