செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வணிகர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது . இதில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், சிறப்பு அழைப்பளராக மாநில துணைத்தலைவர் பிரபாகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் மாநில இணைச் செயலாளர் மகேஸ்வரன், செங்கல்பட்டு நகர வியாபாரிகள்
நலச்சங்கம் தலைவர். உத்திரகுமார், செயலாளர் ஏ.ஜி.டி.துரைராஜ் . துணைத் தலைவர்
சையத்அபுதாகிர். பொருளார் ராஜா முகமது.ஜெயசிமன்.துல்சமத், ஹாஜி மக்காசலீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மற்றும் இதில் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தவரிவிதிப்பை திரும்ப பெறவலியுறுத்திய நிலையிலும், கூடுதலாக 6 .சதவீதம் வரிஉயர்த்தப்பட்டுள்ளது. உரிமம் கட்டணமும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரி மாவட்ட வாரியாக வேறுபடுகிறது.
எனவே, கடை வாடகை மீதான 18 சதவித ஜி.எஸ்.டி.,யை திரும்ப பெற வேண்டும், ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் வணிக உரிமைக் கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு ஆகியவற்றை திரும்ப பெறவேண்டும். என்று.மாநிலம் முழுவதும் சீராக்க வேண்டும் என்பன உள்பட வரி சுமையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 500க்கு மேற்பட்ட நிர்வாகிகள், வணிகர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்