மதுரை: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று இரண்டாவது நாளாக உசிலம்பட்டி பகுதியில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு செய்தார்.
அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம், பொதுமக்களிடம் மனு பெறும் முகாம், அரசு சார்ந்த அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர், இரவு கருமாத்தூரில் தங்கினார். மீண்டும் இன்று காலை இரண்டாவது நாளாக உசிலம்பட்டி அருகே உத்தப்
பநாயக்கனூரில் உள்ள ஆவின் குளிரூட்டும் மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர் சங்கீதா, அங்கு பாலின் தரம் குறித்தும் பரிசோதனை குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து,
பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கி மூலம் பாலின் தொகையை பெறுவதற்காக துவங்கப்பட்ட வங்கி புத்தகங்களையும், வங்கி கடன் அட்டைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து, உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில், கோப்புகளை ஆய்வு செய்த ஆட்சியர் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். உத்தப்ப நாயக்கனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த ஆட்சியர் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவை உண்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, காலை 9 மணியளவில் ஆய்வை முடித்துக் கொண்டு மதுரை புறப்பட்டார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி