தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 70 ஆயிரம் போலீசார் தேவை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய விரைந்து நியமிக்க கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு இன்னும் கூடுதலாக 70 ஆயிரம் போலீசார் தேவையாக உள்ளது. எனவே, பாதுகாப்பை உறுதி செய்ய விரைத்து நியமனம் மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை
ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக புகழப்படும் தமிழ்நாடு போலீஸ் 1859-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, நாட்டின் 5-வது பெரிய போலீஸ் படை பிரிவாக செயல்பட்டு வருகிறது. இதில், 11 டி.ஜி.பி.க்கள். 22 கூடுதல் டி.ஜி.பி.க்கள், 44ஐ.ஜி க்கள், 33 டி.ஐ.ஜி.க்கள், 73 எஸ். பி.க்கள், 3,361 இன்ஸ்பெக்டர்கள், 11,355 சப்-இன்ஸ்பெக்டர்கள். 1 லட்சத்து 17 ஆயிரத்து 654 காவலர்கள் என மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 892பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 1973-ம் ஆண்டு பெண் போலீசாரும் பணிக்கு சேர்க்கப்பட்ட நிலையில், அவர்கள் மட்டும் தற்போது 25,836 பேர் உள்ளனர். 241 எண்ணிக்கையில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. புதிதாக போலீசார் தேர்வு அவ்வப்போது போலீசாரின் காலிப்பணியிடங்களுக்கு புதிதாக போலீசார் தேர்வு செய்து நியமிக்கப்பட வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 3,359 இடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெற்றது. இந்தப் பணியிடங்களுக்கு மொத்தம் 2 லட்சத்து 81 ஆயிரம் 456 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், ஆட்தேர்வு முடித்தும் இன்று வரை அவர்களுக்கு மாத பயிற்சி தொடங்கப்படவே இல்லை பயிற்சி முடிந்தால் தான் அவர்கள் பணியில் சேர முடியும்.
இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு புதிதாக 10 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது, ஆனால், அதற்கும் இன்றுவரை அறிவிப்பு வெளி வராமலேயே உள்ளது. நிலுவை வழக்குகள் எவ்வளவு. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போலீஸ் துறையில் காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருவதால், இருக்கின்ற போலீசாரை வைத்தே அனைத்து பணிகளையும் கவனிக்க வேண்டிய நிலை உள்ளதால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது இதனால், பல போலீசார் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர் குடும்ப நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ள விடுமுறை கிடைப்பதில்லை என்று அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், 2021-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 10 லட்சத்து 62 ஆயிரத்து 909 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதில், கொரோனா காலத்தில் போடப்பட்ட விதி மீறல் வழக்குகள் மட்டும் 8 லட்சத்து 91 ஆயிரத்து 700 ஆகும். அதுபோல, இந்த ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி. எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் மட்டும் 581 நிலுவையில் உள்ளன.
தமிழக மக்கள்தொகை தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர் இருந்தனர். அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கண கணக்கெடுப்பு நடத்தி இருக்க வேண்டும் ஆனால். கொரோனா பாதிப்பால் அது தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்றாலும், தமிழகத்தில் தற்போதைய மக்கள்தொகை 8 கோடியே 15 லட்சமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கணக்குப்படி, ஒரு மாநிலத்தில் லட்சம் பேருக்கு 250 போலீசார் இருக்க வேண்டும். அதாவது, 400 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் போலீசார் இருக்க வேண்டும். 69,858 போலீசார் கூடுதல் தேவை ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை 608 பேருக்கு ஒருவர் என்ற வகையிலேயே போலீசார் இருக்கின்றனர். எனவே, தமிழக மக்கள் தொகையை கணக்கிடும் போது 2 லட்சத்து 3 ஆயிரத்து 750 போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 1 லட்சத்து 33 ஆயிரத்து 892 போலீசார் தான் பணியில் உள்ளனர். அதாவது, 69 ஆயிரத்து 858 போலீசார் கூடுதல் தேவையாக உள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காணவும் போலீஸ் துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதல் போலீசாரை விரைவாக தேர்வு செய்து நியமனம் செய்ய போலீசார் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி