மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் ஒன்றிய திமுக சார்பாக அம்பேத்காரை அவமதிப்பு செய்த அமிர்ஷாவை கண்டித்து பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் செயலாளர் மு பால்பாண்டி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் திரவியம், முன்னாள் பேரூர் செயலாளர் அயோத்தி, பேரூர் துணைச் செயலாளர்கள் ஜெயகாந்தன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தை ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய பிரதிநிதி அய்யாவு கஜேந்திரன் பாலசுப்பிரமணி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன் தொழில்நுட்ப அணி தொகுதி அமைப்பாளர் அரவிந்தன், அயலக அணி துணை அமைப்பாளர் கார்த்திக், வார்டு செயலாளர் மருது கிருஷ்ணன் ராஜசேகர் தினேஷ் மகேஸ்வரன் ராம் மோகன் சேகர் உள்படபலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் அணி நிர்வாகி வினோத் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி