தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. இது குறித்து தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கடந்த 1994ம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான, வருவாய்த் துறை செயலராக உள்ள பி.அமுதா, குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை செயலராக உள்ள அதுல் ஆனந்த், மத்திய அரசுப்பணியில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை கூடுதல் செயலராக உள்ள சுதீப் ஜெயின், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலராக உள்ள காகர்லா உஷா, வேளாண் துறை செயலராக உள்ள அபூர்வா ஆகியோர், செயலர் நிலையில் இருந்து தலைமைச்செயலர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள் கூடுதல் தலைமைச் செயலர்களாகியுள்ளனர்.
இதையடுத்து, வருவாய்த் துறை செயலர், குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் துறை செயலர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர், வேளாண் துறை செயலர் பதவிகள் கூடுதல் தலைமைச்செயலர் நிலைக்கு உயர்த்தப்படுகின்றன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி