மதுரை: காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், ஊதிய முரண்பாட்டை சரி செய்ய கோரி உசிலம்பட்டியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், ஊதிய முரண்பாட்டை சரி செய்ய கோரியும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில், தமிழ்நாடு முழுவதும்
உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், காலி பணியிடங்களை நிரப்ப கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ ஜூயோ மாநில துணை பொதுச் செயலாளர் முருகன் தலை
மையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் இணைந்து கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி