செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயிலில் செங்கல்பட்டு திமுக வடக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஆப்பூர் பி.சந்தானம் தலைமையில் சட்ட மாமேதை அம்பேத்கரை பாராளுமன்றத்தில் இழிவாக விமர்சனம் செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலகக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதனையடுத்து அம்பேத்கர் திருவுவ சிலைக்கு மாலை அனிவித்தனர். இந்த ஆர்பாட்டம் மற்றும் மாலை அனிவிப்பு நிகழ்சியில் திமுகவை சேர்ந்த மாவட்ட ஒன்றிய, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்