மதுரை : தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் சார்பில் முதல் வருடாந்திர மாநில பொதுக்குழு கூட்டமானது, மதுரை மாவட்டம், மேலூரில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் சுதாகர் தலைமையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி விவாதிக்
கப்பட்டது. மேலும், இந்த கூட்டமைப்பு மூலம் நடத்தப்பட்ட போட்டியில் தமிழகம் மற்றும் அல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்ட சைக்கிளிங் ரேசில் தமிழக வீரர்கள் பெருமளவில் வெற்றி பெற்றதாகவும், தற்பொழுது சைக்கிளிங் ரேஸ் போட்டி பெருமளவில் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தெரிவிக்
கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி