செங்கல்பட்டு : புதிய புரட்சிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் OE சங்கர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து தவறாக விமர்சனம் செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் செங்கல்பட்டு தொகுதி புதிய புரட்சிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு தொகுதிமாவட்ட தலைவர் பார்த்திபன் செங்கல்பட்டு தொகுதி மாவட்ட செயலாளர் முருகன், செங்கல்பட்டு தொகுதி மாவட்ட பொருளாளர் மணி ஆகியோர் தலைமையில், சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய புரட்சி கழகத்தின் மாநில நிர்வாகிகள் தலைமைச் செயலாளர் துரைசாமி, மாநில இணைச் செயலாளர் ஹரி கிருஷ்ணன், மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் ஏழுமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் துணைச் செயலாளர் விஜி, இளைஞர் அணி தலைவர் அஜித், இளைஞர் அணி செயலாளர் இளங்கோ, ஒன்றிய தலைவர் ஜஸ்டின், ஒன்றிய செயலாளர் கோபி, கூடுவாஞ்சேரி நகர தலைவர் ராமநாதன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் சரவணன், செங்கல்பட்டு நகர இளைஞரணி தலைவர் பிராங்ளின், திருப்போரூர் தொகுதி நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆட்டோ சதீஷ், மதுராந்தகம் தொகுதி நிர்வாகிகள் மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் சேகர், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ராஜேஷ்,கடலூர் தொகுதி நிர்வாகிகள்
ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் திருக்கழுக்குன்றம் ஒன்றிய துணைத் தலைவர் முரளி, மற்றும் செங்கல்பட்டு மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்