மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சியில் 9 பேர் கொண்ட புதிய கிளை உருவாக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் மாணிக்கம், கருப்பையா, தமிழரசன், மகேந்திரன், முன்னாள் தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலங்காநல்லூர் பேரூர் செயலாளர் அழகுராஜ் வரவேற்றார். முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமாண ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் ஒவ்வொரு கிளைகளிலும் புதிதாக 9 பேர் கொண்ட குழு அமைப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து வருகின்ற 2026 சட்டமன்ற தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மகத்தான வெற்றி எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க கழக நிர்வாகிகள் அனைவரும் இப்போதிலிருந்து தேர்தல் பணியாற்ற வேண்டுமென அவர் தெரிவித்தார்.
முன்னதாக வலையப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாலமேடு பேரூர் செயலாளர் குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராம்குமார், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ஜெயச்சந்திரமணியன், எம்.எஸ்.சுந்தரம். சிதம்பரம் வலையபட்டி கிளை செயலாளர் மனோகரன்மாவட்ட விவசாய அணி குமார், எம்ஜிஆர் இளைஞரணி மனோகரன், மாவட்ட பிரதிநிதி முரளி, உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி