திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில்செயல் அலுவலர் மகேஸ்வரி முன்னிலையில் இன்று நடைபெற்றது. பேரூராட்சியில் உள்ள நவீன எரிவாயு தகனமேடையை முறையாக பராமரிக்கப்பட்டு பராமரிப்பு பணிகளை நன்றாக நிர்வகிக்கும் அனுபவம் உள்ள அறக்கட்டளைக்கு வழங்கி பராமரிக்க வேண்டும் எனவும் சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களால் தொடர்ந்து பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தொடர்கன மழை காரணமாக மீஞ்சூர் பேரூராட்சியில் சேதமாகி குண்டும் குழியுமாக மாறி உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் தற்காலிகமாவது சாலையை சீரமைத்து தரவேண்டும் எனஉறுப்பினர்கள் கோரிக்கை
வைத்தனர் அப்போதுஉரிய நிதி ஒதுக்கி சாலை அமைக்கப்படும் உறுப்பினர்களின்
எழுப்பிய பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டத்தில் உறுதி அளித்தனர். இக்கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு