மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மதுரை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன்60 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் ஓய்வூதியர் சங்கத்தில் நடந்தது. இந்த முகாமிற்கு மாவட்டத் தலைவர் கச்சைகட்டி பாண்டி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஒத்தக்கடை ஜெயபிரகாஷ் , கிழக்கு மாவட்ட தலைவர் பாரத் நாச்சியப்பன், மாவட்டத் துணைத் தலைவர்கள் பொதும்பு செல்வம் , கராத்தே சிவா, மன்ற செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் பால சரவணன் வரவேற்றார். இந்த முகாமில் கிருஷ்ணன் கோவில் கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் சுவாதி தலைமையில் மருத்துவ குழுவினர் 90 பேருக்கு கண் பரிசோதனை செய்து 31 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் வட்டார தலைவர்கள் ரமேஷ் , சத்திரப்பட்டி முருகன் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் முத்து காமாட்சி , பரவை பேரூர் தலைவர் முத்துராமு ,எம்ஏ முத்து குமார், கருப்பட்டி பாண்டி, ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி தலைவர் குட்லாடம்பட்டி குமார்
நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி