விருதுநகர்: காரியாபட்டி யில் இசை திருவிழா நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிராமிய கலை வளர்ச்சி அமைப்பு சார்பில், இசை திருவிழா நடை பெற்றது. விழாவில் , பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். விழாவில், காரியாபட்டி பேரூராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றும் மகாலட்சுமி எழுதிய “நெஞ்சத்து .பூக்கள்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. விழாவில், நாடக நடிகர் . ராதா கிருஷ்ணன், எஸ். பி. எம். நிறுவனர் அழகர்சாமி, இன்பம் பவுண்டேஷன் நிர்வாகிகள் விஜயகுமார், தமிழரசி, தமிழாசிரியர் கவிஞர் ராமலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கிராமிய வளர்ச்சி அமைப்பு நிர்வாகி ரவிச்சந்திரன் செய்திருந்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி