சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்ரமணியபுரத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் முன்னாள் வர்த்தகத் துறை அமைச்சர், பொறுப்புகள் வகித்தவர். ஹெச்.டி.தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால்,
டாக்டர்.மன்மோகன் சிங், ஆகியோரது தலைமையிலான மந்திரி சபையில் கிட்டத்தட்ட பிரதமரை போல் செயல்பட்ட வரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான
கண்டனூர் தந்த சிங்கம், அன்புத் தலைவர் என்று அனைவராலும் போற்றப்பட்ட
ப.சிதம்பரம் அவர்கள், செய்தியாளர் சந்திப்பின்போது ஆங்கில புத்தாண்டு வருவதை ஒட்டி
வாழ்த்து கூறினார். காரைக்குடி செய்தியாளர்கள் என்றாலே ப.சிதம்பரம் அவர்களுக்கு தனிப்பிரியம் உண்டு. பல நேரங்களில் அறுசுவை விருந்து வைத்து அசத்தியவர். உலகத்தில் வாழும் மக்களுக்கும் சமூக நீதி,மத நல்லிணக்கம், நாடு வளர்ச்சி அடைய, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி என்று முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் இந்நாள் மாநிலங்களவை உறுப்பினர் ப சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் இணைந்து புத்தாண்டு ழ்த்துக்களை தெரிவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி