திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் திருப்பூர் காட்டன் திறப்பு விழா மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சார்பில் நடைபெற்றது. இதில் வீட்டிற்கு தேவையான பொருட்கள், ஆடைகள், விளையாட்டுப் பொருள்கள், பேன்சி பொருட்கள் பிளாஸ்டிக் பொருட்கள், பாத்திரங்கள் உட்பட ஏராளமாக குவிந்துள்ள நிலையில் எந்த பொருட்கள் எடுத்தாலும் 200 ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வாங்கி சென்று வருகின்றனர். இதில் மீஞ்சூர் பேரூர் கழக திமுக செயலாளர் க.சு. தமிழ் உதயன், மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், வணிகர்களின் பேரமைப்பு மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் நந்தன், இணை செயலாளர் முருகன், துணைச் செயலாளர் பால்பாண்டி, வேல் ஆச்சாரி, மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு நிர்வாகிகள் தலைவர் ஏ.சி. ராஜேந்திரன், கௌரவ தலைவர் ஏ.கே. சுரேஷ் ,செயல் தலைவர் சம்சுதீன், செயலாளர் அலெக்ஸாண்டர், தலைமை ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர், கௌரவ ஆலோசகர்கள் முகமது அலி, எம்.வி.எஸ். தமிழரசன், செந்தில்நாதன், வேல்ராஜ் ,ராஜன் , பாபு என்ற அஜிஸ், பாலசுப்பிரமணி, முகமது அன்சாரி, சாயின்ஷா , ரியாஸ் அஹமது, இந்துஸ்தான் சீனிவாசன், தனசேகர், ஹஜாசெரீப் , சார்லஸ், சுதாகர், மனோ, கதிர்வேல் , நாகேந்திர குமார், மீஞ்சூர் ஏ. ஆர்.சி. ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ராமகிருஷ்ணன், மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் நக்கீரன், சுகன்யா வெங்கடேசன், மற்றும் மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். மீஞ்சூர் திருப்பூர் காட்டன் கடை திறப்பதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில் மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் முன் நின்று திறக்க பாடுபட்டதால் திருப்பூர் காட்டன் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு