சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் புதுவயல் பேரூராட்சியில் இந்திய வளர்ச்சி இயக்ககத்தின் சார்பாக கிராமப்புற மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலா தலைமை வகித்தார். புதுவயல் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் பகுருதீன் அலி முன்னிலை வகித்தார். யுரேகா ஆசிரியை திவ்யா வரவேற்றார். புதுவயல் தொட்டிநாயக்கன் குடியிருப்பு சிறுசாக்கவயல் பெரியவேங்காவயல் மேலமணக்குடி மற்றும் புதுவயல் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய பதினைந்து மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது . சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலா பேசும்போது எய்டு இந்தியா நிறுவனம் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு ஏழை எளிய மாணவிகளின் கல்வி நலன் மேம்பட காலை மற்றும் மாலை நேரங்களில் யுரேகா கற்றல் மையங்கள் மூலம் வகுப்புகளை நடத்திவருகிறது. தொடர்ந்து உயர்கல்வி பயில கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகளின் கல்விநிலை மேம்படவும் மற்றும் இடைநிற்றலை தடுக்கவும் வறுமை நிலையிலுள்ள 15 மாணவிகளுக்கு 6300 மதிப்பில் சுமார் 94500 மதிப்புள்ள மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. கிராமப் புற மாணவிகள் விளையாட்டு துறையில் ஆர்வம் ஏற்பட எய்டு இந்தியா ஸ்போர்ட்ஸ் கேர்ள்ஸ் என்னும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது என்று கூறினார். ஒன்றிய கருத்தாளர் ரேவதி நன்றி கூறினார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டியன் யுரேகா ஒன்றிய கருத்தாளர்கள் திவ்யபாரதி யுரேகா ஆசிரியர்கள் உய்யவந்தாள் பிரியா அபிநயா கோகிலா அனுசுயா சுதந்திரா கற்பகம் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி