மதுரை: விவேகானந்த கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையம் சார்பாக ஆசிரியர்களுக்கான திறன்மேம்பாட்டுப் பயிற்சி நிகழ்வு (06.01.2025) திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, கல்லூரியின் ஒலி-ஒளி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரையும், கல்லூரி செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த ஆகியோர் ஆசியுரையும் வழங்கினர். இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக முனைவர் பி.நாராயணசாமி (இணைப்பேராசிரியர், இயந்திர பொறியியல் துறை, காமராசர் பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக்
கல்லூரி, மதுரை) கலந்து கொண்டு “ஆராய்ச்சி வெளியீடு மற்றும் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு, முனைவர் அ.சதிஷ்பாபு (அகத்தர மதிப்பீட்டு மைய ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரையும், முனைவர் எம்.பிரபாகரன் (நூலகர்) நன்றியுரையும் வழங்கினர். இந்நிகழ்வினை முனைவர் க.காமாட்சி (உதவிப்பேராசிரியர், விலங்கியல்துறை) தொகுத்து வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி