மதுரை : மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பாக கவர்னரை திரும்ப பெற கோரி கண்டன ஆர்பாட்டம் வாடிப்பட்டியில் நடந்தது. இந்த ஆர்பாட்டத்திற்கு, திமுக மாவட்ட
அவைத் தலை வர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் மு.பால்பாண்டி கோசம் எழுப்பினார். செயற்குழு சேகர், ஒன்றிய செயலாளர்கள் பாலராஜேந்திரன் , பசும்பொன் மாறன், சிறைச் செல்வன், தன்ராஜ், பரந்தாமன்,பேரூர் செயலாளர்கள் மு.பால் பாண்டி , சத்தியபிரகாஷ். ராகுபதி, மனோகரவேல் பாண்டியன், பேருராட்சி தலைவர் ஜெயராமன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் ,முன் னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், சி.பி.ஆர்.சரவணன் , முன்னாள் மாவட்ட துணை தலைவர் அயூப் கான்,பேரூர் அவை தலைவர் திரவியம், பேரூர் துணை செயலாளர்கள் ஜெயகாந்தன், கண்ணன், அய்யங்கோட்டை விஜயகுமார்,இளைஞரணிபேரூர் செயலாளர் ஜி.பி. பிரபு, தகவல் தொழில்நுட்ட பிரிவு செயலாளர் அரவிந்தன்,எம்.எஸ்.முரளி,ராஜசேகரன்,வினோத், உள்பட பேரூர் ஒன்றிய, கிளை கழக, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கவர்னருக்க்கு எதிராககோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி