உலகப் பொருளாதார மேதை, முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் ஆகியோரின் மறைவையொட்டி, சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மறைந்த தலைவர்களின் திருவுருவப் படங்களை திறந்து வைத்து புகழஞ்சலி உரையாற்றினார்.*
இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு அரசின் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள் – முன்னாள் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சர்க்கிள், வட்டார நிர்வாகிகள், சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னணி அமைப்புகள், துணை அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி