மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்வேலிபட்டியில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் சார்பாக ஆயுர்வேத வைத்திய மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, ஒன்றியக் கவுன்சிலர் ஜெகதீஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உதவிப்பேராசிரியர்கள் பழனிக்குமார், சந்திரன், ஆகியோர்முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, சித்த வைத்திய மருத்துவ குழுவின் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் சர்க்கரை, ரத்த அழுத்தம், காய்ச்சல் , தலைவலி, இருமல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்களுக்கு அக்குபஞ்சர்சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு நோய்களுக்கான ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்பட்டது.
பின்னர் பிளாஸ்டிக் பைகளை மறப்போம். துணி பைகளை பயன்படுத்துவோம் என்று மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்து எடுத்துக் கொண்டனர். மேலும் கிராமப்புறங்களில் உள்ள தெருக்கள், சுகாதார வளாகங்கள் | கழிவுநீர் கால்வாய்கள், ஆகியவற்றை சுத்தமாக பராமரிப்பதுபயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைகழிவு நீர் கால்வாய்களிலும் குப்பைகளிலும் தூக்கி எறியாமல் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து வழங்கி கிராம சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் வாயிலாக வலியுறுத்தினர்.
தொடர்ந்து. அந்த பகுதியில் உள்ள கிராம கோவில்கள்உள்ளிட்ட பொது இடங்களில் துப்புரவு பணி மேற்கொண்டனர். இந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமில்கல்லூரி மாணவர்கள்40 பேர் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல்வெலிபட்டி கிராமத்தில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட நாட்டு நல பணித்திட்ட முகாமில் ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி