திருவள்ளூர்: மீஞ்சூர் இரயில்வே மேம்பால பணி தாமதத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக மாற்றுப் பாதையை இரயில்வே சுரங்கப்பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என சென்னை கோட்ட இரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈரியா விடம் பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் கோரிக்கை மனு கொடுத்தார். அப்போது மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணைத்தலைவர் அலெக்சாண்டர் திமுக நகர செயலாளர் தமிழ் உதயன் முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ் வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர் ராஜேந்திரன் கம்யூனிஸ்ட் கதிர்வேல். கோபால் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு