மதுரை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஓய்வு பெற்ற அலுவலர் மற்றும் நில அளவை ஓய்வு பெற்றவர்கள் அலுவலர்கள் இணைந்து சங்கத்தின் செயற்குழு கூட்டம் வேலூர் காட்பாடி சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் சேகர் மாவட்ட தலைவர் சீனி கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியத்தின் தலைமை நிலை செயலாளர் வெ.மகேந்திர குமார், மேனாள் மா தலைவர் ராமநாதன், பொன் வெங்கடேசன், ரமேஷ் குமார், ஆகியோர் சிறப்புரையாற்றினர். அருகில் , வெங்கடேசன் சீனி கதிரேசன், ராஜகோபால், துளசிரங்கன் ஆகியோர் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி