சிவகங்கை: காரைக்குடி மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 76-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக Wing Commander K. சுபாஷ் Commanding Officer, 3 TN AIR SQN (Tech) NCC-Trichy அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். கொடி பாடல் மற்றும் தமிழ் தாய் வாழ்த்தும் இடம் பெற்றிருந்தன. பள்ளி முதல்வர் திருமதி. உஷா குமாரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவர்கள் இடையே நாட்டுப்பற்றினை வளர்க்கும் விதமாக மும்மொழிகளிலும் மாணவர்கள் உரை நிகழ்த்தினார். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன. சிறப்பு விருந்தினர் தமது உரையில் தேசப்பற்று என்பது வெறும் வார்த்தைகளில் உண்டாவது அல்ல. செயல்பாடுகள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். மேலும் தலைமை பண்பு, ஒழுக்கம், நேரம் தவறாமை, கடின உழைப்பு இவை குறித்த செய்திகளையும் மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார். மாணவர்களாகிய நீங்கள் நாளைய தலைவர்கள். உங்களின் ஆற்றல்கள் மூலம் புதிய மாற்றத்தை உருவாக்கலாம் வளமான இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறி தமது உரையை முடித்துக் கொண்டார்.
பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது. விழாவின் சிறப்பம்சமாக பள்ளியின் பல்வேறு துறை செயல்பாடுகளில் பங்கெடுத்து சாதனை புரிந்த செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சேர்மன் SP குமரேசன் மற்றும் துணைச் சேர்மன் K.அருண்குமார் அவர்களும் தமது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் தங்களது குடியரசு தின வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டனர். துணை முதல்வர் திருமதி. பிரேமசித்ரா அவர்கள் நன்றியுரை வழங்கினார். இவ்விழா நாட்டு பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி