மதுரை: மதுரை, உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நகர் கழக செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன் , தேர்தல் பொறுப்பாளர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது. ஒவ்வொரு கிளைகளிலும் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தலில் உழைத்து மாபெரும் வெற்றியை பெற்று தந்தது போல வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் உழைத்து வெற்றியை பெற்று தர வேண்டும் எனவும்,
தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் போது அதில் உசிலம்பட்டி தொகுதியும் இடம்பெற வேண்டும் திமுக-வைச் சேர்ந்த ஒருவர் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என இப்போதில் இருந்தே தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி