விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி 38-வது ஆண்டு விழா நடை பெற்றது. விழாவில், சென்னை ஜீவஜோதி ஐ,ஏ.எஸ் அகாடமி நிறுவனர் லியோ டோமினி தலைமை வகித்தார். விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது, அவர் பேசும் போது, ஊடகம் மற்றும் கைபேசியின் தாக்கத்தில் மாணவர்களின் மனநிலை குறித்தும் அரசு போட்டி தேர்வுகள் எதிர்கொள்ளும் விதம் பற்றி விரிவாக பேசினார். விழாவில் மாணவர்களின் பல்வேறு கலை, நிகழ்ச்சிகள் நடை பெற்றது. பள்ளிகள் 10-ம் வகுப்பு தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் கீதா , சென்ட்மேரி அறக்கட்டளை
செயலாளர் சுரேஷ், மகேஷ் செல்வம் முதல்வர் துணை முதல்வர் நிர்வாகிகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி