திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கடந்த நான்கு ஆண்டு காலமாக அன்னை வேளாங்கண்ணி மாதா கல்வியில் சமூக நல அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளைக்கான புதிய அலுவலகம் திறப்பு விழா பொன்னேரி துர்கா நகரில் நடைப்பெற்றது. புதிய அலுவலகத்தை பொன்னேரி எச்டி.எப்.சி வங்கி கிளை மேலாளர் கபிலன் திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் விழாவில் 50 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பினை அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர். முன்னதாக அறக்கட்டளையின் தலைவர் ஆனந்தி தலைமையில் செயலாளர் ஜெயராமன் முன்னிலையில நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாளர் வசந்தகுமார் வரவேற்பு நிகழ்த்தினார். காவல்துறை அதிகாரி வேலு, மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் ரவிக்குமார், தத்தைமஞ்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தத்தை பிரசாத், சமூக ஆர்வலர் யுவராஜ் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினர். பின்னர் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு