திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கிரசன்ட் நர்சரி பிரைமரி பள்ளியில் அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. எம்.எஃப்.ஐ நிறுவனரும் மேனேஜின் டைரக்டர் ஸ்டேட் கிரீன் சாம்பியன் மீராசா,ரூரல் பேஸ்ட் டெவலப்மென்ட் டிரஸ்டினுடைய நிறுவனர் ஹாஜா மொய்தீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இருவரும் அனைத்து கண்காட்சிகளையும் பார்த்து மாணவர்களை பெரிதும் பாராட்டினர். பள்ளியின் தாளாளர் பி.எஸ்.ஷர்புதீன்,பள்ளியின் முதல்வர் எஸ்.ஏ முகமது ஜமீல் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு