மதுரை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதுரை புறநகர் ஒருங்கிணைந்த மாவட்டம்,
சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி ஒன்றியம் காடு பட்டி ஊராட்சி கழகம் சார்பில், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் தங்கத் தாரகை அம்மா ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடுகிற நிகழ்ச்சியை, மதுரை புறநகர் ஒருங்கிணைந்த மாவட்ட கழகச் செயலாளர் டேவிட் அண்ணாதுரை ஆலோசனை படியும், கழக அமைப்பு செயலாளர் சரவணன், வழிகாட்டுதலின்படியும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்த வாடிப்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் ராஜன், காடு பட்டி ஊராட்சி கழக செயலாளர் செல்லப்பாண்டி , விக்கிரமங்கலம் ஊராட்சி கழக செயலாளர் ரமேஷ் , காடு பட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மாவின் 77 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சின்ன மருது, தேவர் என்ற பரமன் , வடகாடு பட்டி லெனின் , பால்பாண்டி கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை சீரும் சிறப்பாக காடு பட்டி சேர்ந்த முனைவர் பாலு, மதுரை புறநகர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி