திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. ஆண்டு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ப. அலெக்சாண்டர் வரவேற்பு அளித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் வேலு, வசந்தா ஆகியோர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை. சந்திரசேகர் கலந்து கொண்டு சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலுமணி 5-வது வார்டு கவுன்சிலர் ஜெயலட்சுமி தன்ராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் சோனியா, வசந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமதாஸ் , துணைத் தலைவர் தங்கமணி, கவிஞர் தனராசு, சுகுமார் , வழக்கறிஞர் சுதாகர், ஜோதி அக்கா , மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் சமூக ஆர்வலரும் பள்ளி மேலாண்மை குழு பிரதிநிதி குரு சாலமோன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு