மதுரை: மதுரை அருகே திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், பிரார்த்தனைக்
கூடத்தில், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம், RRC, Blood donar Cell மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேலகால் இணைந்து நடத்திய கல்லூரி நிறுவனர் சுவாமி சித் பவானந்தர் அவர்களின் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமில் , கல்லூரி செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த, கல்லூரி முதல்வர் தி. வெங்கடேசன், மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாண்டி மற்றும் கச்சக்கட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கவிஞர் கண்ணன், மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கௌதம், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் அசோக்குமார், முனைவர் ரமேஷ்குமார், முனைவர் ராஜ்குமார், முனைவர் தினகரன் மற்றும் துணை திட்ட அலுவலர்கள் முனைவர் செல்வராஜ், முனைவர் அருள்மாறன், முனைவர் மோகன், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் கேப்டன் ராஜேந்திரன், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு, ஆர். ஆர். சி. ஒருங்கிணைப்பாளர் முனைவர் கணபதி, குருதிக்
கொடை ஒருங்கிணைப்பாளர் முனைவர் கா.காமாட்சி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் 76 மாணவர்கள் இரத்ததானம் செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் தினகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் மாரிமுத்து நன்றியுரை கூறினார். நாட்டு நலப்பணித் திட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் எல்லைராஜா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும்,
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகு கவனித்துக் கொண்டார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி