சிவகங்கை: அறிவியல் கல்லுரியின் மூன்றாம் நாள் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சங்கந்திடல் கிராமத்தில் உள்ள அருள்மிகு பள்ளிகொண்டக் காளியம்மன் திருக்கோவில், வீர ஆஞ்சிநேயர் திருக்கோவில், பெருமாள் திருக்கோவில் மற்றும் நாகம்மா திருக்கோவில் (12-03-2025) சிறப்பாக நடைபெற்றது. “கிராமப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாடு” என்பதை மையக்கருத்தாகக் கொண்டு மாணவ, மாணவியர் களப்பணியாற்றினர். முகாம் நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ஆ. நிஜந்தன் அவர்கள் வரவேற்ப்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ரெ. சந்திரமோகன் தலைமையுரை வழங்கினார். கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் திரு மாயாண்டி அவர்கள் “இளைஞர் சமூகத்தில் இன்றைய தேவை” என்ற தலைப்பின் கீழ் சிறப்புரை ஆற்றினார்.
முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் திருமதி பொற்கொடி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா. திருக்குமரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். அதன் பின்னர் கிராமத்திலுள்ள அருள்மிகு பள்ளிகொண்டக் காளியம்மன் திருக்கோவிலில், வீர ஆஞ்சிநேயர் திருக்கோவில், பெருமாள் திருக்கோவில் மற்றும் நாகம்மா திருக்கோவிலைச் சுற்றிலும் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் சுத்தம் செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி