செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் தனியார் மண்டபத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஐ ஜே கே கட்சி நிறுவனர் முன்னாள் தலைவருமான பாரிவேந்தர் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கோவை தம்பி முன்னிலையில் நடைபெற்றது. இதில் இளைய வேந்தர் தற்போதைய தலைவருமான ரவி பச்சமுத்து மாநில மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் தலைவர்கள் என கலந்து கொண்ட கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய சிறப்பம்சமான போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஓய்வு பெற்று 113 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உயர்த்தி தரவேண்டும் இலவசம் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வீண் செய்வதற்கு பதில் மருத்துவம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு சலுகைகள் அளித்து முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ஆசிய கண்டத்திலிருந்து சிம்பொனி எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையைப் படைத்த உலக இசை அமைப்பாளரான முஸபாத் பித்தோவான் சாய் கோஸ் வாங்கி இசைக்கலைஞர்களின் வரிசையில் இணைந்துள்ள நமது இசை மேதை இளையராஜா அவர்களுக்கு இப்பொழுது இந்த பொதுக்குழு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாரிவேந்தர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். செய்தியாளர்கள் இந்திய ஜனநாயக கட்சி தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளுக்காக வீதியில் இறங்கி ஏன் போராட வருவதில்லை தேர்தல் வரும் பொழுது மட்டும் பொதுக்குழு செயற்குழு மட்டும் கூடுகிறது. என்று கேட்டதற்கு பதில் அளித்த பாரிவேந்தர் இந்திய ஜனநாயக கட்சி வீதியில் இறங்கி போராடுவதற்காக அல்ல இந்த கட்சி சேவை செய்வதற்காக மட்டுமே சாலையில் ஒரு ஐஜேகே கட்சிக்காரர் நடந்து சென்றார். அவருக்கு வணக்கம் சொல்வதும் மக்களுக்கு சேவை செய்யவும் மட்டுமே இந்திய ஜனநாயக கட்சி முழு நேர அரசியல்வாதியாக சம்பாதிப்பதற்காக இந்த கட்சி துவக்கப்படவில்லை அப்பொழுது நீட் தேர்வு என்பது கட்டாயம் தேவை இதே போல் மும்மொழி கொள்கை என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் டாஸ்மார்க் மூலமாக ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக கூறுகின்றனர்.
இது சாமானிய மக்களுடைய வரிப்பணம் அவற்றை எப்படியெல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள் மத்திய அரசு கல்வி ஊக்கத்தொகை விடிவிக்கவில்லை என்பதற்கு அந்தந்த மாநிலங்கள் அவர்களுக்கு ஏற்ற பாணியில் பெற்றுக் கொள்கின்றனர். நீங்கள் ஏன் முன்மொழியை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே எனக்கு இந்தி தெரியாத காரணத்தால் நான் டெல்லியில் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு தடுமாறினேன் ஏன் இந்தி கற்றுக் கொண்டால் என்ன என்று பாரிவேந்தர் செய்தியாளர் மத்தியில் தெரிவித்தார். தமிழக அரசின் பட்ஜெட் என்பது 600 கோடியில் இதை செய்கிறோம் 100 கோடியில் அதை செய்கிறோம் 2000 கோடியில் இதை செய்கிறோம் என்று வெத்து அறிவிப்புகளாகவே உள்ளன. அவற்றை செய்து முடித்துவிட்டு அறிக்கையாக வெளியிட்டால் ஏற்றுக் கொள்ளலாம் இது வெறும் பட்ஜெட் அல்ல வெறும் வெத்து அறிக்கை என்று தெரிவித்தார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்