செங்கல்பட்டு: செங்கல்பட்டு, மார்ச்.17: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள டி. பி. கணேசன் அரங்கில் எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 20 வது பட்டமளிப்பு சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அறிவுப் பயணத்தின் நிறைவைக் குறிக்கும் இவ்விழா, அவர்கள் தொழில்முறை வாழ்க்கையின் அடுத்க் கட்டத்தை நோக்கி முன்னேறும் முக்கிய கருணமாக அமைந்தது. இந்நிகழ்வுப் பாரம்பரிய முறையில் தொடங்கப்பட்டது. பி. சிதம்பரராஜன், இயக்குநர், எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வரவேற்புரை நிகழ்த்தினார். எம். முருகன், முதல்வர். எஸ்.ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, பட்டமளிப்பு நாளின் அறிக்கையை வழங்கி, கல்லூரியின் முக்கிய முன்னேற்றங்களையும் சாதனைகளையும் விவரித்தார்.
இரவி பச்சமுத்து, தலைவர், எஸ்.ஆர்.எம் குழுமம், மற்றும் ஆர், ஹரிணி, நிர்வாக அதிகாரி, எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, தங்கள் அகம்நிறைந்த தெரிவித்துக்கொண்டு, மாணவர்களின் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பைப் வாழ்த்துக்களைத் பாராட்டினர். ஆர். ஹரிணி, நிர்வாக அதிகாரி, எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, தன் உரையில், மாணவர்கள் தங்கள் இலக்கினை எதிர்கொள்ளத் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஊக்கமளித்தார். நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக, முதன்மை விருந்தினர் ஜெய்சங்கர் தாமோதரன், பயிற்சி நியமனத் தலைவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) கலந்துக் கொண்டு, 626 பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 42 சிறந்த மாணவர்களுக்குப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விருந்தினர் தன் உரையில், தொழில்நுட்ப உலகின் மாறுபடும் போக்குகளையும், முக்கியத்துவத்தையும் சிறப்பாக விளக்கினார். நடைமுறை அறிவின் 20வது பட்டமளிப்பு நாள் மாணவர்களின் கல்விச் சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்வாகவும், மேலும் தொழில்சார்ந்த வாழ்க்கையில் சிறந்து விளங்க அவர்களுக்கு ஊக்கமளிக்கும் தருணமாகவும் அமைந்தது
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்