சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசாலையன் கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் பட்டதாரிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் கல்லூரியின் தாளாளர் முனைவர் சேது குமணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
இம்முகாமில் 10 -க்கும் மேற்பட்ட வேளாண் இடுபொருள் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கினார். இவ் வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு வேளாண் கல்லூரிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இம்முகாமின் துவக்க விழாவில் கல்லூரியின் முதல்வர் பொறுப்பு முனைவர் மா. விஷ்ணுப்பிரியா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து சேது வள்ளியம்மாள் அறக்கட்டளையின் அறங்காவலர் விவேகானந்தன், பாஸ்கரா பில்டர்ஸ், சென்னை சோகா இகெதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கண்மணி சுப்பிரமணியன் மற்றும் கல்லூரியின் செயலர் கந்தப்பழம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். இவ் வேலைவாய்ப்பு முகாம் நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இறுதியாக முனைவர் கவியரசு அவர்கள் நன்றியுரை நல்கினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாக செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி