திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து தனியார்துறை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை அமைச்சர் நாசர், ஆட்சியர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் தேர்வானவர்களுக்கு அமைச்சர் நாசர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகர், டி.ஜெ.கோவிந்தராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு