திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே காட்டூரில் மும்மொழி கொள்கையை ஆதரித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது அக்கட்சியின் மாவட்ட தலைவர் சுந்தரம் கூட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டநிலையில் அவர் மேடைக்கு வந்து ஏறியபோது மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் இருளில் அமர்ந்தபடி மின்சாரத்திற்காக காத்திருந்தனர். காலதாமதமானதால் வெகுண்டு எழுந்த பாஜக நிர்வாகிகள் இது திமுகவினர் செய்த செயல் எனக்கூறி திமுக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சிறிது நேரம் கழித்து மீண்டும் மின்சாரம் வந்தது.
அதன்பின் சிறப்பு விருந்தினர்கள் பேசினர். மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தலைவர் டி.யு.பிரபு தலைமையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில சிறப்பு பேச்சாளர் பயர் சதிஷ்,மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர் ஜானகிராமன், மாநில அரசு தொடர்பு தலைவர் பாஸ்கர், ஆன்மீக பிரிவு மாநில செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மும்மொழி கொள்கைக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் பேரூரையாற்றினர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாவட்டச் செயலாளர் இருசப்பன் மற்றும் வேலாயுதம்,துரைசாமி,ரகுபதி, சேகர், நட்ராஜ் காட்டூர் பகுதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.மாவட்ட நிர்வாகிகள் நந்தன், பரமானந்தம், மகாலட்சுமி, தங்கமணி, செல்வி, கே.ஜி.எம்.சுப்பிரமணி, பிரேமலதா, கலைவாணி, சிவகோகுல கிருஷ்ணன், கோவிந்தராஜ், சந்துரு, ஒன்றிய பொறுப்பாளர்கள் முரளி, சேதுபதி, சத்யன், கவிதா மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு