திருவள்ளூர் : மீஞ்சூர் பேரூர் கழக திமுக சார்பில் கோடை வெயிலினை தவிர்க்க தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி மீஞ்சூர் பஜார் பகுதியில் பேரூர் கழக செயலாளர் க.சு.தமிழ்உதயன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். துவக்க தினத்தில் தர்பூசணி, இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, மோர், குளிர்பானங்கள் உள்ளவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் மு.பகலவன்,உமா மகேஸ்வரி, சுப்பிரமணி, ஜெகதீசன், வழக்கறிஞர் ஏ கே சுரேஷ். முரளிதரன், முகமது அலவி, அலெக்சாண்டர், பா.து.தமிழரசன், மணிமாறன் உள்ளிட்ட திரளான கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு