செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 70 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வீராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் டில்லி அவர்கள் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மோகனா ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹெப்சி ராணி வெற்றி செல்வி வரவேற்றார். ஆண்டு அறிக்கையினை அமுல் தமிழ் ஆசிரியர் வாசித்தார்.மற்றும் இந்த நிகழ்ச்சியினை அனிதா ஆசிரியர் தொகுத்து வழங்கினார் இதில் . சிறப்பு விருந்தினராக காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் மாவட்ட கல்விக் குழுத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள் முன்னாள் பள்ளி மாணவர்கள் வார்டு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் அனைத்து மாணவர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் தண்ணீர் பாட்டிலை வழங்கினார். மற்றும் 75 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள் கட்டிடம் கட்டி கொடுக்க ஊராட்சி மன்றத்தின் சார்பாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இறுதியாக சீனுவாசன் ஆசிரியர் நன்றி உரை கூறினார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்