செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் அமைந்துள்ள எஸ் ஆர் எம் வள்ளியம்மை
பொறியியல் கல்லூரியின் 20 வது பட்டமளிப்பு விழா புகழ் பெற்ற டி.பி. கணேசன் அரங்கில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த முக்கிய நிகழ்வுக்கு மாணவர்கள் நான்கு ஆண்டுகளாகடுகளாக மேற்கொண்ட அறிவுத் திறன் வெற்றிக்கான ஓர் அடையாள மாகவும், தொழில் சார்ந்த உலகில் அவர்களின் பயணத்திற்கான, புதிய தொடக்கமாகவும் அமைந்தது. இந்நிகழ்வுப் பாரம்பரிய முறையில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பி. சிதம்பரராஜன், இயக்குநர், எஸ் ஆர் எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வரவேற்புரை நிகழ்த்தினார். எம். முருகன், முதல்வர். எஸ் ஆர் எம் வள்ளியம்மை எஸ் ஆர் எம் வள்ளியம்மை பொறியியல் என்ஜினியரிங் கல்லூரி 204 பட்டப்படிப்பு பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு நாளின் அறிக்கையை வழங்கி, கல்லூரியின் முக்கிய முன்னேற்றங்களையும் சாதனைகளையும் தெரிவித்தனர். இதில் ரவி பச்சமுத்து, தலைவர், எஸ் ஆர் எம் குழுமம் மற்றும் ஆர். ஹரிணி , எஸ் ஆர் எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி தங்கள் அகம்நிறைந்த வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொண்டு, மாணவர்களின் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பைப் பாராட்டினர். ஆர். ஹரிணி, நிர்வாக அதிகாரி, எஸ் ஆர் எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி தன் உரையில்,
மாணவர்கள் தங்கள் இலக்கினை எதிர்கொள்ளத் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஊக்கமளித்தார்.
நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக, முதன்மை விருந்தினர் ஜெய்சங்கர் தாமோதரன், பயிற்சி நியமனத் தலைவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) கலந்துக் கொண்டு, 626 பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 42 சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விருந்தினர் தன் உரையில், தொழில்நுட்ப உலகின் மாறு படும் போக்குகளையும், முக்கியத்து வத்தையும் சிறப்பாக விளக்கினார். இதில் நடைமுறை அறிவின் 20 வது பட்டமளிப்பு நாள் மாணவர்களின் கல்விச் சாதனைகளைக் கொண்டாடும் மிக முக்கிய நிகழ்வாகவும், அவர்களின் சீரிய எதிர்காலத்திற்கான ஒரு தொடக்கமாகவும் அமைந்தது. இந்நிகழ்வு தேசிய கீதத்துடன் நிறைவுப் பெற்றது. இதன் மூலம் பட்டம் பெற்ற மாணவர்கள் எதிர்காலத்திற்கான, புதியப் பாதையை நோக்கி முன்னேறத் தொடங்கினர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்