மதுரை: மக்கள் நீதி மையத்தின் 8ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் மதுரை வடக்கு தொகுதி நிர்வாகி சமுகசேவகர் அண்ணா நகர் கமல் முத்துராமன் பிறந்தநாள் விழா, மற்றும் மாற்றம் தேடி அறக்கட்டளை சார்பாக சமுகதானி விருது வழங்கும் நிகழ்ச்சி மண்டலச் செயலாளர் அழகர் , நல்வாழ்த்துக்களுடன் (6 .4.2025) ஞாயிறு அன்று காலை 11 மணி அளவில் மதுரை சேவாலாய பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் நம்மவரின் விசுவாசி களுக்கு டீ சர்ட் பனியன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பொதுமக்களுக்கு பழங்கள், கேக் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், குணாஅலி, பூமிராஜா, செந்தில் பாண்டி , தர்மர் ,டார்ச் செல்வராஜ், அழகர், ராஜேந்திரன் , சரவணன் , பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழா முடிவில்,
சிற்றுண்டி வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி