திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்திலிருந்து தத்தைமஞ்சி, திருப்பதி ஆகிய வழித்தடங்களில் 2 புதிய பேருந்து சேவைகள் தொடங்கும் விழா இன்று நடைபெற்றது. பொன்னேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர், திமுக மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் ஆகியோர் இணைந்து கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர். கொடியசைத்த உடனே பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ஒரு பேருந்திலும், திமுக மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் மற்றொரு பேருந்திலும் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருவரும் பேருந்தை இயக்கி சேவையை தொடங்கி வைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு