செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவன தலைவர் பூவை மூர்த்தியார் அவர்களின் பிறந்த நாள் விழா கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்வுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் மருந்தாக்குனர்.ச. கவிமேனன் தலைமை தாங்கினார். இதில காஞ்சிபுரம் மாவட்ட ஆலோசகர் மாடம்பாக்கம் ஏழுமலை அவர்கள் பூவை மூர்த்தியார் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். இதில் செங்கை மத்திய மாவட்ட இணை செயலாளர் லோகநாதன், மாவட்ட துணை செயலாளர் மாதா கோயில் ஆனந்தன் அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மற்றும் காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர், சிங்கை சங்கர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர், குருவன் மேடு ஜெகன் அவர்களும் மறைமலைநகர் நகர செயலாளர் பிரேம்குமார் அவர்களும் உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வுக்கு கட்சியின் மூத்த நிர்வாகி வல்லஞ்சரி, முத்து, தொழிற்சங்க நிர்வாகி கங்காதரன், மூத்த முன்னோடி பெருமாள்நல்லூர் பாஸ்கரன் அணை என அனைவரும் வருகை தந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு மருத்துவ உதவிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் பூவை மூர்த்தியார் அவர்களின் மாண்பு எடுத்துரைக்கப்பட்டது மற்றும் இதில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்