திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார கிளை தமிழ்நாடு ஆசிரியர் ஆரம்பப்பள்ளி கூட்டணி சார்பில் பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. நல்லாசிரியர் விருது பெற்ற இரண்டு ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் 16 பேரை கௌரவப்படுத்துதல் மற்றும் மகளிர் தின விழா ஆகிய மூன்று நிகழ்ச்சிகளை கொண்ட முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய செயற்குழு உறுப்பினர் டேவிட் ராஜன் கலந்து கொண்டு அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் நடைப்பெறும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஏழாவது மாநில மாநாடு வருகின்ற மே மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டின் செலவினத்திற்காக மாவட்ட, வட்டார கிளைகளின் சார்பில் நிதி அளிக்கப்பட்டது.
இவ்விழாவில் வட்டாரத் தலைவர் தாரணி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் தங்கவேல் வரவேற்புரை ஆற்றினார். வட்டார பொருளாளர் அலேக்ஸ் டைனிஷியஸ் நன்றி கூறினார். பொன்னேரி கல்வி மாவட்ட தலைவர் ஜான்சி ஜோஸ்வின் ராணி, செயலாளர் சிவலிங்கம், முன்னாள் மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு