திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அண்ணாசிலை அருகில் தமிழ்நாடு பெண்களை இழிவாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை மந்திரி பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக பொன்னேரி தேரடியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொன்முடியின் உருவப்படங்கள் அடங்கிய பதாகைகளில் ராஜினாமா செய்ய கோரி எழுதப்பட்ட வாசகங்களை ஏந்தியபடி ஊர்வலமாக அண்ணா சிலை வரை வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கடுமையாக விமர்சனம் செய்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு