திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வந்த பகுதியில் உப்பு தயாரிக்கும் உப்பளம் அமைக்கும் பணியை இந்திய உப்பு நிறுவனம் சார்பில் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் கடப்பாக்கம்,சிறுபழவேற்காடு, ஆண்டார் மடம் ஆகிய கிராமங்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நல்ல தண்ணீர் உவர் நீராக மாறுவது, நல்ல தாவரங்கள் வளராத நிலைக்கு நிலம் மலடா வது, வடகிழக்கு பருவம் மழையின்போது வெளியேறும் உபரி நீர் வெளியேற முடியாமல் கிராமங்களுக்குள் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உப்பு காய்ச்சுவதால் நிலம் நீர் மாசு ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் இதனால் இந்த திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட கோரி தமிழக அரசை வலியுறுத்தகோரி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறு பழவேற்காடு ,ஆண்டார் மடம் கிராம மக்கள் சார் ஆட்சியர் ரவிக்குமாரிடம் மனு அளித்தனர் இது குறித்து விசாரணை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்வதாக சாராட்சியர் உறுதி அளித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு