மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சித்திரை ரத வல்லப கோவிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குரு பகவான் சன்னதியில் வருகின்ற 11ஆம் தேதி காலை 11 மணியளவில் குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார். பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்: மேஷம் மிதுனம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டியது முக்கியமாகும் விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்வர் குரு பெயர்ச்சி நடைபெறுவதை ஒட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. நேரில் ஆய்வு செய்தார் .
குறிப்பாக, கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் நிலையில் குரு பெயர்ச்சி விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் ஆங்காங்கே தற்காலிக நிழற்குடைகள் அமைத்து தருதல் மற்றும் குருவித்துறை முதல் குருபகவான் கோவில் வரை மற்றும் மதுரை மாவட்ட எல்லையான சித்தாதிபுரம் முதல் கோவில் வரை அனைத்து பகுதிகளிலும் குடிநீர் ஏற்பாடுகள் அமைத்தல் காவல்துறையினருக்கு வெப்பத்திலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்கும் வகையில் நிழல் செட்டுகள் அமைத்தல் கோவில் பகுதியில் தடையின்றி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தல் முக்கியமாக கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருதல் மருத்துவ உதவிகள் அவசரகால மருத்துவ வானங்களை நிறுத்துதல் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குரு பகவான் சந்நிதி வரை தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகள் குறித்து, வாடிப்பட்டி வட்டாட்சியர் மற்றும் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவில் செயல் அலுவலர் ஆகியோரிடத்தில் அறிவுரைகளை வழங்கினார்.
தொடர்ந்து,கோவில் பகுதியில் உள்ள குடிநீர் சின்டெக்ஸ்கழிப்பறை தற்காலிக தங்குமிடம் ஆகிய பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார் .இதில், இந்த நிகழ்ச்சியில், வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணவேணி செயல் அலுவலர் கார்த்திகை செல்வி காடுபட்டி காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் திமுக வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் பசும்பொன் மாறன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் வக்கீல் முருகன், ஊத்துக்குளி ராஜா,
கோவில் பணியாளர்கள் நாகராஜ், மணி, ஊராட்சிச் செயலாளர் மனோ பாரதி
மற்றும் அர்ச்சகர்கள் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி