திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்ன காவணத்தில் தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து எச்.சார்லஸ் வைத்தார். மாநில துணைத்தலைவர் டி.பொன்ராஜ் சங்க கொடியினை ஏற்றி வைத்து பின்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கினார்.
சங்க உறுப்பினர்கள் அனைவரையும் தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் இணைப்பதற்கும், தமிழக அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தும் பெற்று தருவதற்கும், பெயிண்டர்கள் பணி செய்யும் போது ஏற்படும் விபத்துகளுக்கு காப்பீடு வழங்குவதற்கும் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்ய உறுதி அளிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில்
வடசென்னை மாவட்ட துணை தலைவர் எல்.தனசேகரன், திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், பொன்னேரி நகர தலைவர் சீனிவாசன், பொன்னேரி நகர செயலாளர் சிவசங்கர், பொன்னேரி நகர பொருளாளர் தனசேகர், பொன்னேரி நகர துணைத் தலைவர் டில்லி பிரகாஷ், பொன்னேரி கௌரவ தலைவர் சேகர், பொன்னேரி நகர இணை செயலாளர் அன்சர் பாஷா, பொன்னேரி நகர ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், பொன்னேரி நகர துணை ஒருங்கிணைப்பாளர் குமார், பொன்னேரி நகர துணை ஒருங்கிணைப்பாளர் செல்வம், பொன்னேரி நகர கொள்கை பரப்புச் செயலாளர் சண்முகம் மற்றும் உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு