சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதி புதூர் பிரபல ஸ்ரீ இராஜ இராஜன் CBSE பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி 2024 2025 கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இருபிரிவுகளிலும் ஸ்ரீ இராஜ இராஜன் சி.பி.எஸ்.இ. பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 100% தேர்ச்சி பெற்று தொடர்ந்து சாதனை படைத்துள்ளனர். 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம். ஸ்ரீ இராஜ இராஜன் சி.பி.எஸ்.இ. பள்ளியைச் சேர்ந்த M.ஸ்ரீதன் என்ற மாணவன் 460/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவன் கணிதப் பாடத்தில் 98/100, இயற்பியல் பாடத்தில் 95/100, வேதியியல் பாடத்தில் 95/100 பெற்றுள்ளார். S.மதிவதனி என்ற மாணவி பிசினஸ் ஸ்டடிஸ் பாடத்தில் 93/100, கணக்கியல் பாடத்தில் 93/100 பெற்று 85% மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். A.சகானண சமரின் என்ற மாணவி 83% மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
10 ஆம் வருப்புப் பொதுத்தேர்வில் P. பிரமதா என்ற மாணவி 490/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவி தமிழ் பாடத்தில் 100/100 பெற்றது குறிப்பிடத்தக்கது. M. ஹரிஷ் தேவ் 467/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். M. முகில் 457/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10 ஆம் வகுப்பில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக ஸ்ரீ இராஜ இராஜன் CBSE பள்ளி 100% தேர்ச்சி விகிதத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 12 ஆம் வகுப்பில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக 100% தோச்சி பெற்று சாதனை படைத்துள்ளளர். பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவியரை பள்ளிக் கல்வி ஆலோசகர் அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் திரு.சொ.சுப்பையா அவர்கள் பாராட்டினார். பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களும் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி