சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 217 கோடியே 98 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 திருக்கோயில்களில் 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, 21 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் அலுவலகம், 15 ஆய்வர் அலுவலகங்கள் மற்றும் 16 திருக்கோயில்களில் 17 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 3.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருங்கற்கள் பதித்து, குளம் தூர் வாரி சீரமைப்பு பணிகள் நடைபெற்ற திருக்குளத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதே போல பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ரூபாய் 12.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணிகளுக்கும் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 7நிலை ராஜகோபுரம் ஒன்று, 5நிலை ராஜகோபுரங்கள் மூன்று, மேற்கு பிரகாரத்தில் உபசன்னதிகள் கட்டுமான பணிகளை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு